நாட்டுக்கோழி முட்டையின் பயன்கள்
நாட்டுக்கோழி முட்டையின் பயன்கள் "நீங்கள் சாப்பிடும் முட்டையில்" மஞ்சள் கருவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் , அது ஆரோக்கியமான கோழியிலிருந்து வந்ததா இல்லை பிராய்லர் கோழியிடமிருந்து வந்ததா என. முட்டை நல்லது என சிறு வயதிலிருந்தே நமக்கு சொல்லிக் கொடுத்தாலும் அதிலேயும் கலப்படம், ஹார்மோன் ஊசி என மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர் இன்றைய வணிகஸ்தர்கள். ஆரோக்கியத்தையும் எப்போது வணிகம் செய்ய ஆரம்பித்தனரோ அப்போதிருந்து ஆரம்பித்துவிட்டது நமது ஆரோக்கியத்திற்காக கேடு காலம். சாப்பிடும் அரிசியிலிருந்து குடிக்கும் நீர் வரை எல்லாவற்றிலும் ஆபத்து என்றால் எதைத்தான் பின் சாப்பிடுவது என நமக்கு பலக் கவலைகள் சூழ்கின்றன. ஏழைக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை என பள்ளியில் வழங்கப்பட்டதற்கு காரணமே அதன் சத்துக்கள் வளரும் பிள்ளைகளுக்கு சேர வேண்டும் என்பதால்தான். ஆனால் அந்த முட்டைகள் இன்று வெறும் விஷமாகி மாறிப் போகின்றது என்றால் அது எத்தனை துயரமானது. முட்டை எங்கிருந்து பெறப்படுகிறதென்றால் கோழி. அந்த கோழி ஆரோக்கியமானதா என்று கேட்டால் இல்லை.. ஏனென்றால் ப்ராய்லர் கோழிகளை வளர்க்க விட்டு ஸ்டீராய்ட...
Comments
Post a Comment