நாட்டு கோழி வளர்ப்பின் நன்மைகள்
நாட்டு கோழி வளர்ப்பின் நன்மைகள் கோழி விவசாயத்துணைத் தொழில்களில் இன்றைக்குக் கால்நடை வளர்ப்பு, நல்ல லாபம் தரும் தொழிலாக மாறிவருகிறது. அதிலும் குறிப்பாக நாட்டுக்கோழி வளர்ப்பு பிரபலமடைந்து வருகிறது. விவசாயிகள் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பினரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். முறையாகக் கவனித்தால், குறைந்த செலவில், நல்ல லாபம் ஈட்டக்கூடிய தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருக்கிறது. அதே நேரம், ஆர்வமாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்ட பலர், ‘இது சரிப்படாது’ எனப் பண்ணையை இழுத்து மூடிவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒருபக்கம் லாபம் எடுக்கும் நபர்கள், மறுபக்கம் நஷ்டத்தைச் சந்திக்கும் நபர்கள்.. எதனால் நிகழ்கிறது இந்த முரண்பாடு? நாட்டுக்கோழி வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்க்கும் வழிகள் என்ன என்பது பற்றி அறிவோம். “நாட்டுக்கோழி வளர்ப்புல ஈடுபடுறவங்க, முதல்ல ஒன்றை தெளிவா புரிஞ்சுக்கணும். ‘ கோழி வளர்க்கறது என்ன பெரிய சூத்திரமா ? கிராமத்துல தன்னால அலையுற நாட்டுக்கோழிங்கள நாங்க சின்ன வயசுலயே பார்த்துட்டோம்‘னு நினைச்சுகிட்டு இதுல இறங்கக்கூடாது. நாட்டுக்கோழிகளைப் பொறுத்தவரை அத...